ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் தத்துவம் தான் இது வரை மனிதர்கள்
கண்டுபிடித்தவைகளில் சிறந்தது, சமன்பாடுகளின் (Equations) வழியில் புரிந்து
கொள்ள கடினமானதும் கூட. ஆனால் அதன் சாராம்சம், ஒவ்வொரு மனிதனும்
கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது. டைம் மெஷின் (கால இயந்திரம்) என்ற
சிந்தனை பிறந்தது இதன் முடிவுகளில் இருந்து தான். நம்மால் எதிர்
காலத்துக்கு செல்ல முடியுமா ??. இயற்பியலின் விதிகளின் படி பார்த்தால், கண்டிப்பாக முடியும்.
ஒரு சின்ன கற்பனை கதையை நான் கூறுகிறேன்.
நான் இந்த பூமி பந்தை சுற்றியவாறு ஒரு தண்டவாளம் அமைக்கிறேன், என்னுடைய ரயிலை ஓட்டுவதற்காக, அதாவது, சென்னையில் கிளம்பி, பூமியை ஒரு முறை சுற்றி விட்டால், மீண்டும் சென்னைக்கே வந்து விடுவேன்,
ஆனால் இந்த ரயிலில் நான் மட்டுமே பயணிக்க போகிறேன். எனது ரயில் அதிவேகமானது, ஒளியின் வேகத்தில் என்னால் பயணிக்க முடியும், அதாவது, ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் வேகத்தில் என்னால் பயணிக்க முடியும்.
நான் ரயிலை கிளப்புவதற்கு முன்னர், ஒரு கடைக்கு சென்று இரண்டு கடிகாரங்கள் வாங்குகிறேன், இரண்டும் ஒத்த பண்புடையவை ஒரே மாதிரி தான் செயல் படும்.
அதில் ஒன்றை உங்களிடம் கொடுத்து விடுகிறேன், மற்றொன்றை என் ரயிலில் வைத்து விடுகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் தான் இருக்க போகிறீர்கள். நான் எனது வண்டியை கிளப்பும் போது, சரியாக இரண்டு கடிகாரங்களையும் இயக்க வேண்டும்.
"இப்போது எனது வயது 26. நான் எது வரை பயணிக்க போகிறேன் என்றால், எனது கடிகாரத்தில் 50 வருடங்கள் ஓடி முடியும் வரை. வெற்றிகரமாக என் பயணத்தை முடித்து விட்டு பூமியில் நான் கால் வைக்கும் போது எனக்கு வயது 76. இப்பொழுது நான் உங்களை தேடி உங்கள் வீட்டிற்க்கு சென்றால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால், நீங்கள் இறந்து ஏறத்தாழ 500 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும்."
இது தான் உண்மை. நேரம் என்பது நீங்கள் பயணிக்கும் வேகத்தை சார்ந்தது, வேகம் கூடினால் நேரம் சுருங்கும், சாதாரணமாக நாம் உணரும் ஒரு ஐந்து நிமிடம் என்பது அங்கு ஒரு நொடியாக நாம் உணரலாம். நேரம் மட்டுமல்ல, நீங்கள் வேகமாக செல்லும் பொது உங்களை சுற்றி இருக்கும் வெளி (Space) சுருங்கும், உங்களை மேற்கொண்டு செல்ல விடாதவாறு சுருங்கும், மற்றும், உங்களின் எடை பன்மடங்காக உயரும்.
நீங்கள் நிலையாக இருக்கும் போது தனுஷ் எடையில் இருந்தால், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொது இளைய திலகம் பிரபுவின் எடையை அடைந்து விடுவீர்கள்.
நாம் பூமியின் மீது ஒட்டிக்கொண்டு, அதன் வேகத்தில் சென்று கொண்டிருப்பதால், நாம் உணரும் நேரம், எடை, வெளியின் அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கிறது. மொத்தத்தில், இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தது (அதனால் தான் இது சார்பியல் தத்துவம்). வேகம் கூடினால் எதிர்காலதிற்கு செல்லலாம். ஆனால் வேகத்தை குறைத்து கடந்த காலத்திற்கு செல்வது சாத்தியமில்லை.
'கால(ய)மே' இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா!

தகவலுக்கு நன்றி தலைவா ..!
ReplyDeletecould you please explain even clear......
ReplyDelete