Thursday 31 May 2012

கடவுள் இருக்கிறாரா- விஞ்ஞான விளக்கம்

டவுள் இருக்கிறாரா இல்லையா. அனைத்து விஞ்ஞானிகள் முன்னும் வைக்கப்படும் இறுதி கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். பெரும்பாலானோர் கடவுளை விளக்க முனைவதில்லை, மறுதலிக்கவும் மறுக்கவில்லை. கடவுளும் ஆன்மீகமும் வெவ்வேறு பாதையில் பயனிப்பதாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக கடவுளை விளக்க முடியாது என்ற கூற்று அபத்தமானது. அறிவியலில் அனைத்திற்கும் விடை இருக்கிறது, இந்த பதிவை படித்து முடித்தவுடன் உட்க்கார்ந்து யோசித்து பார்க்கவும்.

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் சர் ஐசக் நியுட்டன் வகித்து வந்த பேராசிரியர் பதவியை சில வருடங்கள் முன்னர் வரை வகித்தவரும், தற்கால இயற்பியலில் பெரும்பங்கு ஆற்றிக்கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்க் (Stephen Hawking) தன் புத்தகமான “தி க்ராண்ட் டிசைன்” (The Grand Design) மூலமாக ப்ரபஞ்ச உருவாக்கதின் அடிமட்ட தேவைகளை எடுத்து கூறி கடவுளை நேரடியாக விமர்சிக்கிறார். புத்தகத்தின் சில பக்கங்களை மட்டும் மொழிப்பெயர்த்துவிட்டு தொடர்வோம்:

“இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது தான் என் முழு நேர சிந்தனை, அதில் வெற்றியும் கிடைத்து இருக்கிறது . எளிதாக விளக்க முனைகிறேன், சிறிது கற்பனை குதிரையை தட்டி விட்டால் நீங்களும் வெற்றி பெறலாம்...

வானத்தை தினமும் பார்க்கிறோம், பூமியில் இருந்து மேல் நோக்கி சென்றால் வானத்தை தொட்டு விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அது ஒரு 'முடிவில்லாத' வெட்டவெளி (space), சூரியனில் இருந்து வரும் 'ஒளி' சிதறுவதால் மட்டுமே அந்த வெட்ட வெளி நமக்கு நீலமாக (Blue) தெரிகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
பெருவெடிப்பு (Big bang, which is the origin of universe) நடப்பதற்கு முன்னர், "ஏதுமற்ற நிலை" தான் இருந்தது, அதாவது, கண்களை மூடி கொண்டு பார்ப்பதை போல தான்..... 'ஒன்றுமில்லை' என்ற நிலை, வெளி (Space) என்ற ஒன்று கூட கிடையாது (கற்பனை செய்து கொள்ளவும்).

பெருவெடிப்பு நடந்த அந்த நொடி தான் காலத்தின் (Time) ஆரம்பம், ஆற்றலோ அல்லது பருப்பொருளோ (Energy or mass, since both are inter-related) வெடித்து சிதறியது தான் அந்த நிகழ்வு. இது வரை அனைவரும் அறிந்தது தான், ஆனால், உங்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன், வெடித்து சிதறிய தூசுகள் (அணுக்களின் கூட்டம்) சீரான இடைவெளியில் (equal distance) பரவி இருந்திருந்தால் இந்த பிரபஞ்சம் உருவாகி இருக்காது. 
 வெடித்து சிதறிய தூசுகள் 'ஒழுங்கற்ற' நிலையில் (dis-ordered state) சிதறியதால் மட்டுமே இப்பிரபஞ்சம் உருவாகியது..

காரணம்... இந்த வெட்ட வெளியில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிற்கும் ஈர்ப்பு விசை உண்டு. தூசுகள் (அணுக்களின் கூட்டம் ) , சீரான இடைவெளியில் பரவி இருந்தால், ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்காது, இந்த பிரபஞ்சமும் உருவாகி இருக்காது...நீங்களுமில்லை.. நானுமில்லை. நான் சொல்ல வருவது ஒன்று தான், ஒழுங்கற்ற நிலை தான் இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்கிறது. என் கேள்வி என்னவென்றால், கடவுளிற்கு இங்கு என்ன வேலை ??. 'ஆற்றல்' என்று நாம் விஞ்ஞானத்தில் வருவிக்கப்பட்டது (Derived) தான் கடவுள் என்பதை நாம் ஏன் உணரவில்லை ???. கடவுள் என்ற கோட்பாடை நாம் ஏன் கொலை செய்கிறோம் ??.
ஆனால், அனைவராலும் தடுக்க முடியாத கேள்வி. அதெப்படி ஏதுமற்ற ஒன்றில் இருந்து ப்ரபஞ்சம் உருவாகியது ??
இதற்கும் பதில் வைதிருக்கிறது அறிவியல்..

இயற்பியலில் சிறிது பின்னோக்கி நியூட்டன் வாழ்ந்த காலத்திற்கு செல்வோம். நியூட்டனின் கணிப்பு படி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும், கிரகங்களும் கனகச்சிதமாக தங்களின் பாதைகளில் சுழன்று கொண்டு இருக்கின்றன, சுழன்று கொண்டு தான் இருக்கும். ஆனால், காலபோக்கில் விஞ்ஞானத்தின் பிடியில் நியூட்டனின் கணிப்பு பொய்த்தது. அது வரை இருந்த அறிவியலின் பார்வை மாறியது. 'classical physics' என்று அது வரை இருந்த தத்துவங்களுக்கு பெயர் வைத்து மூடிவிட்டார்கள்.

அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றை விட்டு ஒன்று விலகி செல்கிறது, உதாரணம், சூரியனை பூமி சுற்றுகிறது, ஆனால், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளி சிறிது சிறிதாக கூடிகொண்டே போகிறது. இந்த விலகல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எது வரை தொடருமென்றால் ஒவ்வொரு அணுவும் தனித் தனியாக பிரிந்து அழிந்து போகும் வரையில். இறுதியில், ஏதுமற்ற நிலை என்று ஆரம்ப நிலைக்கே இந்த பிரபஞ்சம் சென்று விடும் என்பது அறிவியலின் கருத்து. இது நியூட்டன் அறிந்திராதது. 

விரிவாக தெரிந்து கொள்ள பிக் ரிப் (Big Rip) என்று விக்கிபீடியாவில் தட்டவும். உயிரினங்கள் மட்டுமே இறந்து போகும் என்று நினைக்காதீர்கள், இந்த பிரபஞ்சமே ஒரு நாள் இறந்து போகும். அறிவியலின் கணக்குகளை வைத்து எப்பொழுது அழிந்து போகும் என்று கூட கண்டுபிடித்து விட்டார்கள். 'Quantum physics' என்று இயற்பியல் பிரிந்த பொழுதில் தான் கடவுளை பற்றிய கேள்வி எழுந்தது. (இங்கு அதை நான் விளக்கவில்லை)
இந்த அனைத்து கண்டுபிடிப்புகளுடன், டார்வினின் தத்துவங்களை பொருத்தி பார்த்தால் கடவுளை ஓரளவுக்கு தொட்டு விடலாம். தான் வாழ்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப, காலப்போக்கில், தன் உடலை மாற்றி கொள்ளும் திறமை ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது என்பது தான் டார்வினின் கண்டுபிடிப்பு.

எனது தாழ்மையான கருத்து என்ன வென்றால்.. தனகென்று ஒரு உடலை, தானாக அமைத்து, தானாக பரினாமித்த, 'உயிர்' தான் கடவுள். உயிருள்ள அனைத்தும் கடவுள். இதை தவிர வேறு எங்கு கடவுள் இருக்க முடியும்???. வாழ வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம். ஒரு உயிருக்கு தீங்கு நினைப்பவன் கடவுளை கொலை செய்கிறான். இந்த அறிவு மிருகங்களுக்கு கிடையாது. சில மனிதர்களுக்கும் கிடையாது. நாம் வாழ சில உயிரினங்களை கொல்வது (தாவரங்கள் மற்றும் சிக்கன்கள்) எதனாலென்றால், நாம் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கிறோம். இந்த கொலைகளை செய்யாமல் நாம் உயிர் வாழமுடியாது. கடவுள் என்ற வார்த்தை காலப்போக்கில் திரியபட்டு அறியப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்....

2 comments:

  1. //தனக்கென்று ஒரு உடலை தானாக அமைத்து,தானாக பரிணமித்த,உயிர்தான்
    கடவுள்//
    அபாரம் கீழ் கண்ட பதிவை பார்க்கவும்
    http://omeswara.blogspot.com/2013/07/blog-post_18.html?utm_source=BP_recent

    ReplyDelete
  2. அவ்வளவுதானா?

    ReplyDelete