Thursday 8 March 2012

கடவுளுடன் ஒரு கட்டிங்: முதல் பகுதி

அன்று,

சரியாக காலை மணி 8. என் உயிர் நண்பன் கல்மாடி, வீட்டு மாடியில் இருந்து, பல் துலக்கிக் கொண்டே எதிர் வீட்டு வாசலை நோக்கி கொண்டிருந்தான். அவனது முழுப்பெயர் ‘அலெக்ஸ் கல்மாடி’, இருந்தாலும், நண்பர்கள் மத்தியில் அவனை ‘ஊட்டி வாயன்’ என்றே அழைத்து வருவதால், அவனது சொந்த பெயர் அவனுக்கே மறந்து விட்டது.


“டே மச்சி.... கடவுள் இருக்குறாரு டா ...!!!”

ஊட்டி வாயனின் அலறல், உரக்க கேட்டது. இரவு முழுவதும் கடவுளை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். “கடவுள் இருக்கிறாரா இல்லையா” இது தான் டாபிக். இறுதி வரை, அவன் பேசியதை நானும், நான் பேசியதை அவனும் கேட்கவில்லை. அதனால், இருவரும் வெற்றி பெற்றதாக நினைத்து கொண்டு தூங்கி விட்டோம். இது தினமும் நடப்பது தான்..


“மச்சி நான் கண்டிப்பா சொல்றேன்.. கடவுள் இருக்குறாரு டா..”

ஊட்டி மறுபடியும் கூவினான்.


காலைலே ஆரம்பிச்சிட்டியா உன் மொக்கய ” கேட்டுக்கொண்டே நானும் மாடிக்கு வந்தேன்.

“டே.. எதிர் வீட்டு நித்யா.... இப்ப கூட வெளிய வந்து பாத்துட்டு போனா டா.. நைட்டே உங்கிட்ட சொன்னேன்ல, கடவுள் எங்க ரெண்டு பேரயும் சேர்த்து வைப்பாரு பாரு டா...” ஊட்டி சந்தோஷமாக கூறினான்.

ஒரு முறை அவனை காரி துப்புகிற மாதிரி பார்த்து விட்டு..

“உனெக்கெல்லாம் வெட்கமாவே இல்லயா டா...இதே டயலாக்க தான கீழ் வீட்டு ஏஞ்சல்க்கு சொன்ன..” என்று கேட்டேன்

“ஹா.. ஹா.. அதுக்கு தான் மச்சி நான் ரெண்டு கடவுள கும்புடுறேன்,, அவளுக்கொரு கடவுள்... இவளுக்கொரு கடவுள்..” சீரியசாக கூறினான்.

அதற்கு மேல் அவனிடம் பேசி கடுப்புகளை டவுன்லோட் செய்து கொள்ள விரும்பவில்லை.

“மச்சி... எனக்கொரு ‘ஐடியா’. நாம ஏன், நமக்குனு ஒரு கடவுள கண்டுபிடிக்க கூடாது” என்னை போக விடாமல் தடுத்து கேட்டான்..

“கடவுள கண்டுபுடிக்கனுமா....!!. என்ன டா லூசு மாதிரி பேசுற, கடவுள் என்ன காணாம போன ஏ.டி.எம் கார்டா கண்டுபுடிச்சு எடுக்குறதுக்கு” எரிச்சலுடன் கேட்டேன்.

“உனக்கொன்னும் தெரியாது... என் சின்ன வயசுல, எங்க பாட்டி எங்கிட்ட நெறய தடவ சொல்லிருக்கு... கடவுள் அடிக்கடி பூமிக்கு வந்து உளவு பார்பாராம், தப்பு செய்ரவங்க பேர ஒரு நோட்ல எழுதி வச்சுக்கிட்டு, செத்த பிறகு தண்டன குடுப்பாராம்...” ஊட்டி சொல்லிக் கொண்டே இருந்த நேரத்தில், எதிர் வீட்டு நித்யா கல்லூரிக்கு கிளம்பி வெளியேறியதால் சங்கத்தை அத்துடன் கலைத்து விட்டு சென்று விட்டான்..

து நடந்து சில நாட்கள், மாதங்கள், தாறு மாறாக ஒடிய பின்பு, இன்று தான் திடிரென்று நினைவில் வந்தது அந்த ‘கடவுள் ஐடியா’. அதுவும், எதிர் வீட்டு நித்யாவை அவள் கனவனுடன் பார்த்தவுடன் தான். இருந்தாலும், ஊட்டி வாயன் ஏன் அப்படி சொன்னான். அவன் ஒரு அண்ட புளுகன் என்பது ஊரறிந்த செய்தி, ஆனால் ஒரு சில நேரங்களில் அவன் அறிவாளி போலவே பேசுவான். இது ஏன் அப்படி இருக்க கூடாது...?? 
  
பல குழப்பங்களுக்கு தீர்வாக, என்னை நானே தேற்றி கொள்வது தான் சிறந்த முடிவு. சரி, கடவுளை உன்மையாக நம்பினால் அவரே நம்மை தேடி வருவார் என்று எங்கோ படித்தது ஒடிக்கொண்டிருக்க, மெதுவாக தெருவில் இறங்கி நடந்தேன். இன்று ரூமில் யாரும் இல்லை, மீன் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு, தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்ல, சமைத்து விடுவது என்று முடிவு செய்து மீன் மார்க்கெட் நோக்கி நடயை கட்டினேன்.



மீன் மார்க்கெட் முழுவதும் மக்கள் வெள்ளம். “அது ஏன் இந்த ஒரு நாளில் மட்டும் இத்தனை பேர் மீன் சாப்பிடனும்னு நினைக்கிராய்ங்கஎன்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டு, கூட்டம் கம்மியாக இருக்கிற ஒரு கடையை தேர்ந்து எடுக்க முயன்ற போது தான் அவரை கவனித்தேன். பாத்தவுடனே ஏதோ பொறி தட்டியது. அனைத்து மக்களும், மீன் கடையில் தம் கட்டிவிலை குறைப்புவேலையை பக்காவாக செய்து கொண்டிருந்த போது, அவர் மட்டும், வெளியே சிதறி கிடந்த ஒரு மீனை கையில் எடுத்து, ஆழமாக பார்த்து கொண்டிருந்தார். பேசியே தீர வேண்டும் என்ற உந்துதலில், அருகில் சென்று,

எதுக்கு அந்த மீன வெறிச்சு பாக்குறீங்க, அது கெட்டு போச்சு, தூர போடுங்க”  என்று கூறினேன்.


பதில் எதுவும் கூறாமல், அந்த மீனை கீழே போட்டு விட்டு என்னை கடந்து சென்று விட்டார். விடாமல் துரத்தி சென்று,


 “உங்கள நான் எங்கேயோ பாத்துருக்கேன்.. நீங்க எந்த ஊரு பாஸ்?..” என்று கேட்டேன்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊரு தான் பாஸ்..” என்று சொல்லி விட்டு மீண்டும் நடக்க முயன்றார்..

எதுக்கு அந்த மீன அப்படி பார்த்தீங்கன்னு மட்டும் சொல்லிட்டு போங்கநான் அவரை போக விடவில்லை. என் கேள்வியை கேட்டு, என்னிடம் நெருங்கி வந்து, என்னை ஒரு முறை உற்று பார்த்து விட்டு..

உனக்கெல்லாம் சொன்னா புரியதுஎன்று எனக்கு மட்டும் கேட்கும் படி கூறினார்.


பரவால்ல.. சொல்லுங்க பாஸ்.. எங்களுக்கும் எல்லாம் தெரியும். கைலயே மொபைல் இன்டெர்நெட் இருக்கு.. நீங்க எது சொன்னாலும் அஞ்சே நிமிஷத்துல கண்டு புடிச்சுருவோம்ல..”  கையில் இருந்த நன்பனின் ப்ளாக் பெர்ரியை எடுத்து காட்டினேன்..

ஒரு சில வினாடிகள் என்னை அமைதியாக பார்த்து விட்டு..

பூமியில் வாழும் உயிரினங்களில், எலும்புள்ள அனைத்தும், மீனுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும். உங்களின் உடலில் அமைந்துள்ள எலும்புகளின் மூதாதையர்கள் இந்த மீன்கள் தான், இவைகளுக்கு தான் முதன் முதலில் எலும்பு தேவைப் பட்டது, அதற்கு முன்னர் இருந்த, முள் இல்லாத உயிரியில் இருந்து, காலப்போக்கில், தங்கள் தேவைக்காக உற்பத்தி செய்த முட்கள் மாதிரியான எலும்புகள் தான் உங்களுக்கு பரினாம வளர்ச்சியில் எலும்புகளாகவும், அதை உற்பத்தி செய்த மீன்கள், இறையாகவும் கிடைக்கிறது பொறுமையாக பேசி முடித்தார்..

ஊட்டி வாயன் பாட்டி சொன்னது உன்மை தான் டா.. இவரு சொல்றது ஒன்னுமே புரியல.. கண்டிப்பா இவரு கடவுளா தான் இருக்கனும்என்று யோசனை ஓடிக்கொண்டிருக்கும் போதே கேட்டு விட்டேன்..

நீங்க கடவுள் தான???!!!...”

இந்த கேள்வியை கேட்டு அவர் சிறிதும் ஆச்சர்ய படவில்லை. மாறாக சந்தோஷமாக என்னை பார்த்து..

நான் இந்த பூமிக்கு வந்து முப்பது வருஷங்கள் ஆகுது. இது வரை யாரும் என்னை கண்டுபிடிக்க வில்லை. நீ தான் என்னை சரியாக கனித்தாய்என்று கூறி விட்டு மறுபடியும் சிரித்தார்.



கடவுள் என்ற உடன், ‘அறை எண் 305’ படத்தில் வரும் ப்ரகாஷ்ராஜ் மாதிரி நினைத்து விடாதீர்கள். என் கடவுள் பார்ப்பதற்குவிருமாண்டிபடத்தில் வரும் பசுபதி மாதிரி தான் இருக்கிறார். கடும்கோபக்காரர் என்பது முக பாவனைகளை பார்க்கும் போதே நன்றாக புரிகிறது.
  

நான் தான் உங்களுக்கு முதல் பக்தன்.!!!!.. எனக்கொரு வரம் தாருங்கள் என்று கேட்டேன்.

நீ தான் எனக்கு ஒரே பக்தன்.. வேறு யாரிடமும் நான் பேசுவது கூட கிடையாது.. பேசவும் மாட்டேன். நீ வரத்தை கேளு என்னால முடிஞ்சா குடுக்கிறேன் என்று கூறினார்


என் கூட வந்து ஒரு நாள் எங்க ரூம்ல நீங்க தங்கனும்..” கூறி விட்டு, ஆவலுடன் பதிலை எதிர் நோக்கினேன்..



நீ பொன்னோ பொருளோ கேட்டிருந்தால், உன்னை உமிழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன்….!!!. 


உன் ஆர்வத்தினால், உன்னுடன் ஒரு மணி நேரம் இருக்கிறேன், ஆனால், இரு நிபந்தணைகள்,


ஒன்று.. 

என்னுடைய கருத்துகளை யாரிடமும் பரப்ப கூடாது

இரண்டு,. 

நான் உன்னுடன் இருப்பதாக சொல்லி, ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போட கூடாது சொல்லி விட்டு அழுத்தமாக என்னை பார்த்தார்.


நமக்கு, கடவுள் மீது சத்தியம் செய்வதென்பது, சரக்கடிச்சுட்டு சன் மியுஸிக் பார்ப்பது போன்றது, என்பது கடவுளுக்கு தெரியாததால், அவர் மீதே சத்தியம் செய்து வைத்தேன்..

எங்களது ரூமிற்கு செல்லும் வழியில் நானும் என் கடவுளும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, ஆனால், என் மனதில், ஒரு ஜாவா ப்ரோக்ராமிங்கே ஓடிக் கொண்டிருந்தது,

கைல கால்ல விழுந்தாவது கடவுள எங்க ரூம்லயே தங்க வச்சுரனும்.. 

கடவுள எப்புடி நம்ம வழிக்கு கொண்டு வரலாம்


இதுவரை மக்கள் எப்புடி கடவுளை தங்கள் வழிக்கு கொண்டுவந்தார்கள்..??????????????  

9 comments:

  1. கடவுளுடன் பேச்சுவார்தை நடத்த தேவலோகம் சென்றிருக்கிறீர்களோ? உங்கள் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
  2. கடவுள் கூடிய சீக்கிரம் காட்சி தருவார் என்று நம்புகிறேன்.. பொறுத்திருந்து பார்க்கலாம்

    ReplyDelete
  3. looking forward the second part anna...

    ReplyDelete
  4. welcome onboard prabha,

    Really a hilarious narration to begin with; looking forward for more...

    Good Luck!

    ReplyDelete
  5. கடவுளுடன் பேச்சுவார்தை நடத்த தேவலோகம் சென்றிருக்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன் ஆனால் நீங்களோ கடவுளையே உடன் அழைத்து வந்துவிட்டீர்களே!!! ஆஹா பேஷ் பேஷ்.

    ReplyDelete
  6. ஓ GOD எனக்கும் ஒரு சான்ஸ்

    ReplyDelete
  7. இதுவரை மக்கள் எப்புடி கடவுளை தங்கள் வழிக்கு கொண்டுவந்தார்கள்..?????????????? “
    லஞ்சம் (காணிக்கை) கொடுத்துதான்....... அவருக்கும் family expenses இருக்கு இல்ல......

    ReplyDelete
  8. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல அறிவியல் கதை களம்.. கடவுளுடன் ஒரு கட்டிங் தலைப்பே ஈர்க்கிறது, பல வரிகள் இயல்பாக ஆனால் அழுத்தமாக இருக்கிறது, கடவுள் சரக்கு கேட்டவுடன் " காதல் தோல்வியோ..?" என்று தோன்றியது.. ஆனால் நல்லவேளை அப்படி இல்லை, " ஆமா மீன் வாங்க மார்கெட் போயிட்டு மீன் வாங்காமலே வந்துடின்களே பாஸ்.." கடவுள் கிட்ட இந்த கரென்ட் பிரச்சனை எப்போ முடியும்னு கேட்டு இருக்கலாம், எனிவே கதை அருமை, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete